ஸ்ரீ ஸுக்தம் சிறப்பு மற்றும் பாடல் வரிகள்

Sri Suktam Lyrics in Tamil

ஸ்ரீ ஸுக்தம் என்பது வேதத்தின் ஒரு பாகம் ஆகும். ஸ்ரீ என்பது செல்வம் மற்றும் செல்வத்தை அருளும் லக்ஷ்மி தேவியைக் குறிக்கும் சொல்லாகும். பொருளிலார்க்கு இவ்வுலகில்லை அருளிலார்க்கு இவ்வுலகில்லை என்று கூறுவார்கள். இந்த உலகில் வாழ்வதற்கான பொருளை அருளும் தெய்வம் லக்ஷ்மி தேவியே. இறைவனின் திருவடிகளை அடைய வேத பாராயணங்கள் எப்படி உதவுகின்றதோ அது போல லக்ஷ்மி தேவியின் திருவருளை அடைய ஸ்ரீ ஸுக்தம் உதவுகின்றது. இந்த உலகில் சௌபாக்கியத்தொடு வாழ நமக்கு  பொன், பொருள், புகழ், கல்வி முதலிய யாவும் தேவை. நம் வாழ்வில் இருந்துஇவற்றைப் பிரித்துக் காண இயலாது  இவற்றை எல்லாம் அடையத் தான் நாம் அன்றாடம் பாடுபடுகிறோம். என்றாலும்  சில சமயங்களில் நாம் தோல்வியையும் காண்கிறோம். எனவே நமது முயற்சிகளில் வெற்றி காண லோகமாதாவாகத் திகழும் லக்ஷ்மி தேவியை நேரில் உபாசிக்கும் முறையாக ஸ்ரீ ஸுக்த பாராயணம் திகழ்கின்றது.

ஸ்ரீ ஸுக்தம் ஒரு பத்திக்கு இரண்டு இரண்டு வரிகளாக பதினைந்து பத்திகளாக அமைந்து உள்ளது. இவற்றை ருக்குகள் என்பார்கள். அதாவது ஸ்ரீ சுக்தம் பதினைந்து ருக்குக்களைக் கொண்டது. இந்த ருக்குகளை முறையாக உச்சரித்துப் பாராயாணம் மற்றும் ஹோமம் செய்வதன் மூலம் பெயரும், புகழும், செல்வமும், கல்வியும் பெற்று இன்பமயமான வாழ்வு இந்த உலகில் வாழ முடியும். மேலும் பிறவித் தளைகள் நீங்கி முக்தி என்னும் வீடுபேறு அடைய முடியும். தினமும் பாராயணம் செய்வதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

ஸ்ரீ ஸுக்தம் பாராயணம் செய்யும் முறை:

ஸ்ரீ ஸுக்தம் லக்ஷ்மி தேவியின் அருள் வேண்டி பாராயணம் செய்யும் பாடல் ஆகும். இதனை முறையாகக் கற்று பின்னர் தான் பாராயணம் செய்ய வேண்டும். முறைப்படி கற்றவர்கள் பாராயணம் செய்வதைக் கேட்டும் பயனுறலாம். இதனைக் காலை வேலைகளில் தான் பாராயணம் செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்னர் பாராயணம் செய்வது சிறப்பு. ஸ்ரீ சுக்தத்தில் பதினைந்து ருக்குக்கள் உள்ளன. ஒவ்வொரு ருக்குகளும் வெவ்வேறு ஆசிகளை வழங்குகின்றன. ஆற்றின் விவரங்கள கீழே அளிக்கப்ப்ட்டுள்ளன.

ஸ்ரீ ஸுக்தம்

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் |

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அனபகாமிநீம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விந்தேயம் காமஶ்வம் புருஷானஹம் ||

அஸ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினாத-ப்ரபோதி’னீம் |

ஶ்ரியம்’ தேவீம் உப’ஹ்வயே ஶ்ரீர்மாதேவீ ஜு’ஷதாம் ||

காம் ஸோஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாராம் ஆர்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

சந்த்ராம் ப்ரபாஸாம் யஶஸா ஜ்வலந்தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாம் உதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌ அலக்ஷ்மீர்மே’ நஶ்யதாம் த்வாம் வ்ரு’ணே |

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌தி’ஜாதோ வனஸ்பதி: தவ வ்ருக்ஷோத பில்வ|

தஸ்ய பலா’நி தபஸானு’தந்து மாயாந்’ராயாஶ்ச பாஹ்யா அ’லக்ஷ்மீ: ||

உபைது மாம் தேவஸக: கீர்திஶ்ச மணிநா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌ஸ்மி’ ராஷ்ட்ரே‌ஸ்மிந் கீர்திம்ரு’த்திம் ததாது மே ||

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம் அ’லக்ஷீம் நா’ஶயாம்யஹம் |

அபூ’திம் அஸ’ம்ருத்திம் ச ஸர்வாம் நிர்ணு’த மே க்ருஹாத் ||

கந்தத்வாராம் து’ராதர்ஷாம் நித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

மன’ஸ: காமமாகூதிம் வாச: ஸத்யம் அ’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீ: ஶ்ர’யதாம் யஶ: ||

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’நீம் ||

ஆப:’ ஸ்ருஜந்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்ருஹே |

நிச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் பிங்களாம் ப’த்மமாலிநீம் |

சந்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

ஆர்த்ராம் ய: கரி’ணீம் யஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீம் அநபகாமிநீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌ஶ்வா”ன், விந்தேயம் புரு’ஷாநஹம் ||

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம்

ஸதஸம்”வத்ஸரம் தீர்கமாயு:’ ||

ஓம் ஸாந்தி ஸாந்தி ஸாந்தி:’ ||

ஸ்ரீ சுத்தம் பாராயணம் செய்வதால் கிட்டும் பலன்கள்: ஒவ்வொரு ருக்குகளும் அளிக்கும் பலன்கள் : (Sri Suktam Lyrics in Tamil)

1. தேஜஸ், கீர்த்தி கிட்டும் 2. பசு, சேவகர்கள் போன்ற பாக்கியங்கள் கிட்டும் 3. எதிரிகள் அழிவார்கள் 4. கல்வியில் சிறந்து விளங்க இயலும் 5. ஐசுவரியம் விருத்தி ஆகும் 6. நிலையான செல்வம் கிட்டும் 7. குபேரன் ஆசிகள் கிட்டும் 8. தரித்திரம் நீங்கும் 9. தான்ய விருத்தி கிட்டும் 10. வாக்கு சாதுரியம் ஏற்படும் 11. வம்சவிருத்தி ஆகும் 12. உயர்பதவி கிட்டும் 13. வாகனப் பிராப்தி ஏற்படும் 14. ராஜ போகம் கிட்டும் 15. கல்வி முதலிய செல்வங்கள் கிட்டும்