குமாரஸ்தவம் பாடல் வரிகள்!!!

Kumarasthavam Lyrics in Tamil

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு பல்வேறு மந்திரங்கள், பாடல்கள் மற்றும் பதிகங்கள் உள்ளன. கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி என பொதுவாக பலரும் அறிந்த பாடல்கள் உள்ளன.  இவை யாவும் முருகனின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்த பாடல்கள் என்று கூறலாம். மேலும் ஒரு சக்தி வாய்ந்த பாடலாக குமாரஸ்தவம் (Kumarasthavam Lyrics in Tamil) அமைந்துள்ளது. இந்த பாடலை தினமும் பாடுவதன் மூலம் பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

குமாரஸ்தவம் (Kumarasthavam ) ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது ஆகும். இவர் முருக பக்தர். துறவி மற்றும் கவிஞர். இந்த  துதி அல்லது பாடல் முருகப் பெருமானின் அருள் வேண்டி அவர் பாடியது ஆகும். இதனை கந்த புராணத்தின் சுருக்கம் என்றும் கூறலாம். இது மொத்தம் 44 வரிகளை உடையது.

இந்தப் பாடலை தினமும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் முருகன் திருவுருவப்  படம் அல்லது சிலை முன்பு நின்று பாராயணம் செய்தால் கை மேல் பலன் கிடைக்கும். ஆலயம் சென்றும் பாராயணம் செய்யலாம். ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே முருகன் படம் அல்லது வேல் முன்பு நின்று இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தொடர்ந்து இதனைப்  பாராயணம் செய்வதன் மூலம் எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள்  நீங்கும். அமைதியான வாழ்க்கை வாழ முருகனின் அருள் கிட்டும்.

1.   ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ

  ஓம் –  ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2.   ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ

   ஓம் –  ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ

   ஓம் –  ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4.   ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ

   ஓம் – ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5.   ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ

  ஓம் – அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6.   ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ

  ஓம்  – ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7.   ஓம் நவநிதி பதயே நமோ நமஹ

   ஓம் –  ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8.   ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ

  ஓம் – பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9.   ஓம் நரபதி பதயே நமோ நமஹ

  ஓம்  – அரசர் தலைவனுக்கு வணக்கம்

10.   ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ

   ஓம் – தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ

   ஓம்  – நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12.   ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ

   ஓம் – ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13.   ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ

    ஓம் – கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14.   ஓம் தபராஜ பதயே நமோ நமஹ

   ஓம் –  தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15.   ஓம் இகபர பதயே நமோ நமஹ

   ஓம் –  இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16.   ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ

   ஓம் –  திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதர் தலைவனுக்கு வணக்கம்

17.   ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ

   ஓம் – மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18.   ஓம் நயநய பதயே நமோ நமஹ

   ஓம் – மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ

   ஓம்-  அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20.  ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ

   ஓம் – தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21.  ஓம் வல்லீ பதயே நமோ நமஹ

   ஓம் – வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22.  ஓம் மல்ல பதயே நமோ நமஹ

   ஓம் – மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23.  ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ

   ஓம் – கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24.  ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ

   ஓம் –  கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25.  ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ

   ஓம் –  சஷ்டி திதியில் அமைந்த கந்த விரதத் தலைவனுக்கு வணக்கம்

26.  ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ

   ஓம் – வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27.  ஓம் அபேத பதயே நமோ நமஹ

   ஓம் – வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28.  ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ

   ஓம் – மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29.  ஓம் வியூஹ பதயே நமோ நமஹ

   ஓம் –  சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30.  ஓம் மயூர பதயே நமோ நமஹ

   ஓம் –  மயூர நாதனுக்கு வணக்கம்

31.  ஓம் பூத பதயே நமோ நமஹ

   ஓம் – பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32.  ஓம் வேத பதயே நமோ நமஹ

     ஓம்-  வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33.  ஓம் புராண பதயே நமோ நமஹ

   ஓம் – புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34.  ஓம் ப்ராண பதயே நமோ நமஹ

   ஓம் – ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35.  ஓம் பக்த பதயே நமோ நமஹ

   ஓம் – அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36.  ஓம் முக்த பதயே நமோ நமஹ

   ஓம் – பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37.  ஓம் அகார பதயே நமோ நமஹ

   ஓம் –  அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38.  ஓம் உகார பதயே நமோ நமஹ

   ஓம் –  உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39.  ஓம் மகார பதயே நமோ நமஹ

   ஓம் –  மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40.  ஓம் விகாச பதயே நமோ நமஹ

   ஓம் –  எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41.  ஓம் ஆதி பதயே நமோ நமஹ

   ஓம் – எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42.  ஓம் பூதி பதயே நமோ நமஹ

   ஓம் – சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43.  ஓம் அமார பதயே நமோ நமஹ

   ஓம் – மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44.  ஓம் குமார பதயே நமோ நமஹ.

   ஓம் –  குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று