சிவன் போற்றி பாடல் தமிழில்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்;சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்; சிவ சிவ என்னச் சிவகதி தானே! என்கிறார் திருமூலர். சிவபெருமானை வணங்கிட சிந்தை தெளிவாகும். சிறப்பு மிக்க சிவபெருமானை வணங்கிட எத்தனையோ விரதங்கள் இருந்தாலும், நித்தமும் சிவனை வணங்கிட, அவனருளால் பாவ வினைகள் நீங்கும். சதாசிவனை ஜெபித்திட சத் கதி தான் கிட்டும் என்பார்கள். அவன் தாள் வணங்க அவனருள் கிட்டுவது நிச்சயம். தினமும் வரும் மாலை நேரம், அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ நேரம் ஆகும். இதனை நித்தியப் பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் சிவபெருமானின் போற்றிப் பாடலை பாடி துதிப்பது அனைத்து நன்மைகளையும் அளிக்கும். இந்த போற்றிப் பாடலை நீங்கள் ஆலயம் சென்றும் ஜெபிக்கலாம். இயலாதவர்கள் இல்லத்தில் இருந்தபடியே ஜெபிக்கலாம்.
உங்கள் சிந்தை மகிழச் சிவபெருமானை போற்றிட சிவனின் 108 போற்றியை இந்தப் பதிவில் அளித்துள்ளோம்.
108 சிவன் போற்றி :
1. ஓம் அப்பா போற்றி
2. ஓம் அரனே போற்றி
3. ஓம் அரசே போற்றி
4. ஓம் அமுதே போற்றி
5. ஓம் அழகே போற்றி
6. ஓம் அத்தா போற்றி
7. ஓம் அற்புதா போற்றி
8. ஓம் அறிவா போற்றி
9. ஓம் அம்பலா போற்றி
10. ஓம் அரியோய் போற்றி
11. ஓம் அருந்தவா போற்றி
12. ஓம் அணுவே போற்றி
13. ஓம் அண்டா போற்றி
14. ஓம் ஆதியே போற்றி
15. ஓம் ஆறங்கா போற்றி
16. ஓம் ஆரமுதே போற்றி
17. ஓம் ஆரணா போற்றி
18. ஓம் ஆலவாயா போற்றி
19. ஓம் ஆரூரா போற்றி
20. ஓம் இறைவா போற்றி
21. ஓம் இடபா போற்றி
22. ஓம் இன்பா போற்றி
23. ஓம் ஈசா போற்றி
24. ஓம் உடையாய் போற்றி
25. ஓம் உணர்வே போற்றி
26. ஓம் உயிரே போற்றி
27. ஓம் ஊழியே போற்றி
28. ஓம் எண்ணே போற்றி
29. ஓம் எழுத்தே போற்றி
30. ஓம் எண்குணா போற்றி
31. ஓம் எழிலா போற்றி
32. ஓம் எளியா போற்றி
33. ஓம் ஏகா போற்றி
34. ஓம் ஏழிசையே போற்றி
35. ஓம் ஏகாந்தா போற்றி
36. ஓம் ஐயா போற்றி
37. ஓம் ஒருவனே போற்றி
38. ஓம் ஒப்பிலா போற்றி
39. ஓம் ஒளியே போற்றி
40. ஓம் ஒலியே போற்றி
41. ஓம் ஓங்காரா போற்றி
42. ஓம் கடம்பா போற்றி
43. ஓம் கதிரே போற்றி
44. ஓம் கனியே போற்றி
45. ஓம் கலையே போற்றி
46. ஓம் காருண்யா போற்றி
47. ஓம் குறியே போற்றி
48. ஓம் குருவே போற்றி
49. ஓம் குணமே போற்றி
50. ஓம் கூத்தா போற்றி
51. ஓம் கடையே போற்றி
52. ஓம் சங்கரா போற்றி
53. ஓம் சதுரா போற்றி
54. ஓம் சதாசிவா போற்றி
55. ஓம் சிவமே போற்றி
56. ஓம் சிறமே போற்றி
57. ஓம் சித்தமே போற்றி
58. ஓம் சீரா போற்றி
59. ஓம் சுடரே போற்றி
60. ஓம் சுந்தரா போற்றி
61.ஓம் செல்வா போற்றி
62. ஓம் செங்கணா போற்றி
63. ஓம் செம்பொணா போற்றி
64. ஓம் சொல்லே போற்றி
65. ஓம் ஞாயிறே போற்றி
66. ஓம் ஞானமே போற்றி
67. ஓம் தமிழே போற்றி
68. ஓம் தத்துவா போற்றி
69. ஓம் தலைவா போற்றி
70. ஓம் தந்தையே போற்றி
71. ஓம் தாயே போற்றி
72. ஓம் தாண்டவா போற்றி
73. ஓம் திங்களே போற்றி
74. ஓம் திசையே போற்றி
75. ஓம் திரிசூலா போற்றி
76. ஓம் துணையே போற்றி
77. ஓம் தெளிவே போற்றி
78. ஓம் தேவ தேவா போற்றி
79. ஓம் தோழா போற்றி
80. ஓம் நமசிவாயா போற்றி
81. ஓம் நண்பா போற்றி
82. ஓம் நஞ்சுண்டா போற்றி
83. ஓம் நன்மறையா போற்றி
84. ஓம் நிறைவா போற்றி
85. ஓம் நினைவே போற்றி
86. ஓம் நீலகண்டா போற்றி
87. ஓம் நெறியே போற்றி
88. ஓம் பண்ணே போற்றி
89. ஓம் பித்தா போற்றி
90. ஓம் புனிதா போற்றி
91. ஓம் புராணா போற்றி
92. ஓம் பெரியோய் போற்றி
93. ஓம் பொருளே போற்றி
94. ஓம் பொங்கரவா போற்றி
95. ஓம் மணியே போற்றி
96. ஓம் மதிசூடியே போற்றி
97. ஓம் மருந்தே போற்றி
98. ஓம் மலையே போற்றி
99. ஓம் மஞ்சா போற்றி
100. ஓம் மணாளா போற்றி
101. ஓம் மெய்யே போற்றி
102. ஓம் மெய்பொருளே போற்றி
103. ஓம் முகிலே போற்றி
104. ஓம் முத்தா போற்றி
105. ஓம் முதல்வா போற்றி
106. ஓம் வாழ்வே போற்றி
107. ஓம் வைப்பே போற்றி
108. ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி